பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் உதவியாளரை பயணி ஒருவர் பாய்ந்து வந்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இரு தரப்பும் சமாதானம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் விஜய்சேதுபதியின் உதவியாளரை உதைத்தது சொல்லப்படும் நபர், விஜய் சேதுபதி இந்தியாவை விமர்சித்தார். முத்துராமலிங்க தேவரை விமர்சித்தார்.அதனால்தான் நான் உதைத்தேன் என்றே யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து வருகின்றார்.இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
அதில், தேவர் அய்யாவை இழிவுபடுத்தி அதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைத்தால், அவர் மன்னிப்பு கேட்கும் வரை ஒரு உதைக்கு ரூ.1001 பரிசு வழங்கப்படும் என்று அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார்.இத்தகைய வன்முறை தூண்டும் பதிவுகளை வெளியிட்ட அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். அவர் கூறியுள்ள இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.