Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொலை வழக்கில் கைதான 6 பேர்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் மக்தூம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்துல் காதர் என்ற மகன் உள்ளார். இவர் பாளையங்கோட்டை மிலிட்டரி கேன்டீன் அருகே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் அப்துல் காதரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை காவல் துறையினர் 21 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் வசிக்கும் பொன்பாண்டி, மணிகண்டன், சியாம், பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்ற மணி, நாங்குநேரி பகுதியில் வசிக்கும் தங்கபாண்டி, சங்கர் ஆகிய 6 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Categories

Tech |