தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரின் ஊர்ந்து செல்கின்றன. வீடுகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் மழை பாதிப்புகள் tndmart என்ற இணையதளம் மற்றும் 9445869848 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மக்கள் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் 1077என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு மக்கள் தகவல் அளிக்கலாம். இல்லையென்றால் 9384056213 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.