அவெஞ்சர்ஸ் பிளாக் விடோ கேரக்டர் பாணியில் என்டரி கொடுத்து ஆக்ஷன் படம் பார்க்க அழைப்பு விடுத்துள்ளார் தமன்னா. சுந்தர் சி – விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் குறித்த பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வந்துகொண்டிருக்கிறது.
ட்ரெய்லர் இடம்பெற்ற பிரமாண்ட காட்சிகள், அதிரடி சண்டைக்காட்சிகள் படம் முழுவதும் இருப்பதாகப் பேசப்படுகிறது. இதனிடையே ஆக்ஷன் படத்தில் பாதுகாப்புப் படை அலுவலராகவும் அண்டர்கவர் ஆபரேஷனில் ஈடுபடும் கேரக்டராகவும் நடித்துள்ள தமன்னா படத்தை பார்க்க ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து சிறிய விடியோ கிளப்பிங்கை வெளியிட்டுள்ளார். அவெஞ்சர்ஸ் படத்தில் இடம்பெறும் பிளாக் விடோ கேரக்டர் பாணியில் என்டரி கொடுத்து, ஆக்ஷன் படத்தை தவறாமல் அருகிலிருக்கும் திரையரங்குகளில் பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, “சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் எனக்குப் பிடித்த ஆக்ஷன் ஜானரில் இந்தப் படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளேன்” என சிலாகித்துக்கொண்ட தமன்னா, தற்போது இந்தப் படத்தின் ரிசல்ட்டை பெரிதும் எதிர்நோக்கியுள்ளார்.
Don't miss the #Action! Watch #ActionFromTomorrow at a theater near you. pic.twitter.com/sbVNT7Cvdo
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) November 14, 2019