Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீராத கடன் தொல்லை…. உரக்கடை உரிமையாளரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உரக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை கவுண்டன்புதூரில் செல்லமுத்து என்பவர் வசித்து வந்தார். இவர் தோப்பூர் பகுதியில் உரக்கடை ஒன்று நடத்தி வந்தாராம். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு மகிலன் என்ற மகனும், நிகாசினி என்ற மகளும் இருக்கின்றனர். இதில் செல்லமுத்து தன்னுடைய தொழிலுக்காக பல பேரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் செல்லமுத்துவால் கடனை மீண்டும் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் தங்களுடைய பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி செல்லமுத்துக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த செல்லமுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் செல்லமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லமுத்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லமுத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |