கார் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மெஞ்ஞானபுரத்தில் அச்சக உரிமையாளரான டேனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான துர்காசுரன் மற்றும் ராஜகண்ணன் ஆகியோருடன் நாசரேத்திலிருந்து மெஞ்ஞானபுரத்திற்கு காரில் சென்றுள்ளார். இவர்கள் மூவரும் நாசரேத்திலுள்ள வாழையடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்களது காரின் மீது வேகமாக வந்து மோதியுள்ளது. இந்த விபத்தில் டேனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
மேலும் படுகாயமடைந்த துர்காசுரன் மற்றும் ராஜகண்ணன் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுபற்றி தகவலறிந்த நாசரேத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துர்காசுரன் மற்றும் ராஜகண்ணன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ம இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.