Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த மூதாட்டி… மர்மநபர்கள் செய்த காரியம்… போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியை மிரட்டி 1 பவுன் தங்க மோதிரத்தை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தை அடுத்துள்ள வி.புதுப்பாளையம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பாப்பாத்தி. இன்னிலையில் சுப்பிரமணி வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக  கடைக்கு சென்றுள்ளார்.இதனையடுத்து பாப்பாத்தி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென அவரது வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

மேலும் வீட்டில் நகை பணம் எதுவும் கிடைக்காததால் பாப்பாத்தி கையில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க மோதிரத்தை மட்டும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து பாப்பாத்தி உடனடியாக ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |