Categories
மாநில செய்திகள்

BIG ALERT: அடுத்த 3 நாட்கள்…. மக்களுக்கு தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் இடை விடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து 11ஆம் தேதி வரை தமிழகம் அருகே வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.

இதையடுத்து நவம்பர் 9, 10,11 ஆகிய தேதிகளில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தன்னார்வ நிறுவனங்கள் பொது மக்களுக்கு உதவ களத்திற்கு வரவேண்டும். பத்தாம் தேதி அதிக கன மழை பெய்தால் எதிர்கொள்ள முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பிரதான வழித்தடங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். தமிழகத்தில் வருகின்ற 10 ஆம் தேதி அதிக கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |