நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி இயக்குனர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இளைஞர்களின் அரசியல் ஆசான், உலகத்தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை, நாளைய தமிழகம் மகன் சீமானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ”தமிழர் நலனுக்காகத் தளராத தன்முனைப்புடன் உழைப்பவர், மாற்றம் வேண்டுமென ஆற்றலுடன் முன் செல்லும் அன்புத் தம்பி செந்தமிழன் சீமான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருந்தார்.