கிணற்றில் தவறி விழுந்த பசு மாடை காப்பாற்ற நினைத்த விவசாயி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள பாளையம் கிராமத்தில் சீரங்கன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த 2 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் சீரங்கனுடைய பசுமாடு உயிரிழந்து மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் உடனடியாக கிணற்றில் இறங்கி கயிறு மூலம் பசு மாடை மீட்டுள்ளனர். இதனையடுத்து சீரங்கன் செருப்பு மற்றும் அவர்இந் துண்டு கிணற்றில் மிதந்ததால் சந்தேகமடைந்து தீயணைப்பு துறையினர் தொடர்ந்து கிணற்றில் இறங்கி தேடியுள்ளனர். சுமார் அரை மணிநேர தேடுதலுக்கு பிறகு சீரங்கனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெண்ணந்தூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சீரங்கன் உடலை மீட்டு உடற்கூராவிர்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில் பசு தவறி கிணற்றில் தவறி விழுந்து, அதனை காப்பாற்ற முயன்ற சீரங்கனும் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.