ஐந்து வயது சிறுமி ஆண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவில் உள்ள டிக்ராப்போவில் சில்வர் ஸ்மித் மற்றும் விக்டோரியா லோசியா தம்பதியினருக்கு பிறந்த 9 குழந்தைகளில் ஒருவர் தான் லீனா. இவர் 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி பிறந்தார். அதிலும் ஐந்து வயது இருக்கும் பொழுது லீனாவின் வயிறு திடீரென பெரிதாகியுள்ளது. இதனை கண்ட பெற்றோர்கள் லீனாவின் வயிற்றில் கட்டி வளர்கின்றது என்று நினைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதனை அடுத்து லீனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏழு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்த அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த நிலையில் லீனாவுக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த குழந்தையை எடுத்தனர். அந்தக் குழந்தையானது 1939ஆம் ஆண்டு மே மாதம் 14 தேதி பிஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்தது. அதிலும் அக்குழந்தையின் எடையானது ஆறு பவுண்டுகள் ஆகும்.
குறிப்பாக அந்த குழந்தையை பெற்றெடுக்கும் பொழுது லீனாவுக்கு 5 வயது 7 மாதங்கள் 21 நாட்களே ஆனது. இந்த செய்தியானது உலகளாவிய மருத்துவத் துறையை பெரிதும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில் “மூன்று வயது இருக்கும்போதே லீனாவுக்கு மாதவிலக்கு நிகழ்ந்துள்ளது.
இதனை அடுத்து அவர் ஐந்து வயதிலேயே முழுமையான வளர்ச்சியை எட்டியுள்ளார்” என்று தெரிய வந்துள்ளது. மேலும் அவரின் தந்தை 40 வயதிலேயே மறைந்துவிட்டார். இந்த நிலையில் அவர் கருவுற்றதற்கு காரணமானவர் யார் என்பது எவருக்கும் இதுவரை தெரியவில்லை. குறிப்பாக அது இறுதிவரை புரியாத புதிராகவே அனைவருக்கும் உள்ளது.