Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“திருமணத்திற்கு அழைக்கவில்லை”…. தகராறு செய்த நபர்…. பின் நடந்த சோகம்…!!

உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பாத்திமா நகரில் மீனவரான புருனோ என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் ஒருவர் தனது வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு புருனோவிற்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த புருனோ திருமண வீட்டிற்கு சென்று உறவினர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் அதே பகுதியில் வசிக்கும் அந்தோணி என்பவர் புருனோவை தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த புருனோ அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். பின்னர் புருனோவை தாக்கியதற்காக அவரின் சகோதரி கருங்கல் காவல்நிலையத்தில் அந்தோணி மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் அந்தோணியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |