கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் திசையன்விளை பகுதியில் வசிக்கும் அல்போன்ஸ் ராஜாவின் மனைவியான அனிதா என்பதும் மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அனிதாவை கைது செய்ததோடு அவரிடமிருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.