பிரபல மலையாள நடிகை கேபிஏசி லலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவர் 2 தேசிய விருது பெற்றவர். தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படத்தில் நடித்துள்ளார்.
Categories