இருசக்கர வாகனம் நிலைதடுமாறி இரும்பு தடுப்பில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கிளாமரம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் கானாவிளக்கு சென்று விட்டு மீண்டும் அங்கிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கிளாமரம் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறியுள்ளது.
அப்போது அப்பகுதியில் இருந்த இரும்புதடுப்பில் மோதி ராஜேஷ் படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.