ஈபிள் கோபுரத்தை போன்ற அளவில் மிகப்பெரிதான ஒரு விண்கல், ஒரு மணி நேரத்திற்கு 14,714 மைல் வேகத்தில் பூமியின் அருகே பயணிக்கவிருப்பதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
பூமியிலிருந்து நிலவு இருக்கும் தூரத்தை காட்டிலும் 10 மடங்கு அதிகமான தூரத்தில், அந்த விண்கல் பயணிக்க இருக்கிறது. அதாவது, பூமியை தாண்டி சுமார் 2.5 மில்லியன் மைல் தூரத்தில் தான் பயணிக்கும். எனவே, இதனால் பூமிக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கல்லானது, ஏறக்குறைய முட்டை அமைப்பில் இருக்கிறது. மேலும், இது 1,082 அடி நீளம் உடையது மற்றும் பூமியின் வட்டப்பாதையை கடந்து செல்லும். எனவே, இது மிக ஆபத்தானது தான் என்று நாசா கூறியுள்ளது. இந்த விண்கல்லானது, 4660 Nereus என அழைக்கப்படுகிறது. இது டிசம்பர் மாதத்தில், பூமியிலிருந்து 2.5 மில்லியன் மைல் தூரத்தில் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கல், அடுத்த மாதம் 11ஆம் தேதி அன்று, பூமிக்கு மிக அருகில் வந்துவிடும் என்றும், அதன்பின்பு, சூரியனைச் சுற்றியுள்ள அதன் வட்டப்பாதைக்குச் செல்லும். அதனையடுத்து, வரும் 2060ஆம் வருடத்தில் பிப்ரவரி மாதத்தில், பூமியிலிருந்து 7,50,000 மைல் தூரத்தில் மீண்டும் பயணிக்கும் என்று நாசா கூறியிருக்கிறது.