தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக, நாளை நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார். கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் ஏற்கனவே, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.