மதுரை மாநகராட்சிக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2019 மேயர், மாமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பமனு பெறும் நிகழ்வு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு வேட்பாளர்களின் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், “திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை பிறாண்டுவதிலேயே குறியாக இருக்கிறார்” என நகைச்சுவையாக சைகையின் மூலம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், “ஸ்டாலின்பல திட்டங்களைப் போட்டு பார்த்தார், எதுவும் பலிக்கவில்லை. கோபத்தின் உச்சத்திற்ககே சென்றுவிட்டார். உள்ளாட்சித் துறையில் நிர்வாக ரீதியாக செயலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வேறு எந்த காரணம் இல்லை.தமிழ்நாட்டைப் பொருத்தவரை அதிமுக வெற்றிடத்தை நிரப்பிவிட்டது என்று மு.க.அழகிரி கூறியது அவரது சொந்தக் கருத்தாக இருக்கலாம். , ஐஐடி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்பதை முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.