தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நல்ல மழை பெய்து வருவதால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழையின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகள் மற்றும் அணைகள் நிரம்பி வழிகின்றன.
இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேட்டூர் அணையில் இருந்து நாளை காலை 5 மணிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. எனவே காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.