Categories
மாநில செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள்…. எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகின்ற நிலையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று விடிய விடிய பெய்த கனமழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடிபழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த பின்னர், அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

Categories

Tech |