Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணி நெருக்கடியா? பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் எடுத்த விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!

அதிக மாத்திரைகளைத் தின்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவர் நேற்று அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்றதால் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அந்த இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயர் அதிகாரியின் பணி நெருக்கடி மற்றும் கடுமையான நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என தகவல் பரவியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் நெல்லை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |