தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கடந்த 4ஆம் தேதி அன்று வெடிகள் வெடித்து மற்றும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் இந்த விடுமுறை நாட்களில் தனது சொந்த ஊர்களுக்கு குடும்பங்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்றார்கள்.
இந்நிலையில் விடுமுறை முடிந்து நேற்று முன் தினம் அவர்கள் தங்கள் சொந்த ஊரில் இருந்து தங்கள் வேலை பார்க்கும் போது பகுதிகளுக்கு திரும்பினார்கள். இதன் காரணமாக சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகமான வாகனங்கள் அணிவகுத்து. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் சுங்கச்சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் ஆவின் மேம்பாலம் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் ஆகிய இடங்களிலும் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டது. அதனைப்போலவே கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் பேருந்துகளின் படிகளில் நின்றவாறு பொதுமக்கள் பயணம் செய்தனர்.