Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளியில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…. கைது செய்த போலீஸ்….!!

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதன் பின் மறுநாள் காலையில் வந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து அந்தோணி பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் மகிழ்ச்சி நகர் பகுதியில் வசிக்கும் சந்தோஷ்குமார், பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் ஆனந்த் என்பதும் அவர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |