கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் மீண்டும் ஜின்பிங்கே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் கட்சியின் மத்திய குழுவில் இருக்கும் முழுநேர மற்றும் பகுதி நேர உறுப்பினர்கள் என சுமார் 400 பேர் பங்கேற்றனர். அதிலும் 68 வயதான ஷி ஜின்பிங் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. மேலும் கட்சியானது அவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மீண்டும் அவரே மூன்றாவது தடவையாக அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கான தீர்மானம் உறுதியாகியுள்ளது.
குறிப்பாக அவருக்கு முன்பிருந்த ஹூ ஜின்டோ இரண்டு முறை மட்டுமே அதிபராக பதவி வகித்துள்ளார். மேலும் இரண்டு முறை மட்டுமே ஒருவர் அதிபராக இருக்கலாம் என்ற கட்டுப்பாட்டு இருந்தது. ஆனால் கடந்த 2018 ஆம் கொண்டு வந்த அரசியலைமைப்பு சீர்திருத்தம் மூலம் அதிபர் அதனை மாற்றி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.