Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களே…! முன்பதிவு செய்யவில்லையா…? கவலைய விடுங்க…. இதோ குட் நியூஸ்…!!!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை வரும் 15ம்தேதி திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. கொரோனாவை முன்னிட்டு மண்டல, மகரவிளக்கு காலத்தில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கப்பட உள்ளனர். ஆனால் மகர விளக்கு பூஜை தினத்தன்று மட்டும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜைக்காக முன்பதிவும், புத்தாண்டு தரிசனத்திற்கான முன்பதிவும் முடிந்துவிட்டது. முன்பதிவு செய்யாதவர்கள் சபரிமலைக்கு சென்று உடனடியாக முன்பதிவு செய்தும் தரிசனம் செய்யலாம். நிலக்கலில் இந்த வசதி நவ-15 ஆம் தேதி  தொடங்குகிறது.

Categories

Tech |