Categories
தேசிய செய்திகள்

போபால் விஷவயுக்கசிவு எதிர்ப்பு போராளி காலமானார்..!!

போபால் விஷவாயுக் கசிவுக்கு எதிராக போராடிய சமூக செயற்பாட்டாளர் அப்துல் ஜாபர் காலமானார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 1984-ஆம் ஆண்டு விஷவாயுக் கசிவு துயரம் நடந்தது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த துயரத்துக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னின்று நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க செய்தவர்தான் இந்த அப்துல் ஜாபர்.

Image result for Social activist Abdul Jabbar, who fought the Bhopal gas leak, has passed away.

போபால் விஷவாயுக்கசிவு துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எவ்வித சமரசமுமின்றி வாதாடினார்.கடைசிவரை யாரிடமும் சமரசம் செய்துக் கொள்ளவில்லை. சில மாங்களுக்கு முன்பு அப்துல் ஜாபருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

Image result for Social activist Abdul Jabbar, who fought the Bhopal gas leak, has passed away.

 

கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரின் சிகிச்சைக்கு உதவுவதாக கடந்த வாரம் மாநில அரசு அறிவித்தது. இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

Categories

Tech |