Categories
உலக செய்திகள்

2 வாரத்தில் 60 பேருக்கா..? முதியோர் இல்லத்தில் அபாயம்… அதிகாரிகளின் தீவிர விசாரணை..!!

சுவிட்சர்லாந்தில் சுமார் 60 பேர் முதியோர் இல்லத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ் நாட்டில் உள்ள Oberriet என்ற பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் 25 ஊழியர்களுக்கும், 43 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் தரப்பில் இந்த கொரோனா தொற்று பாதிப்பு குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமையில் வைக்கவும், புதிதாக கொரோனா தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதனை கண்டறியவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே மொத்தம் 60 நபர்களுக்கு அக்டோபர் 22-ஆம் தேதிக்கு பிறகு கொரோனா பாதிப்பு இருப்பது புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் ஆறு பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் சுவிட்சர்லாந்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |