Categories
உலக செய்திகள்

சர்வதேச பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழையலாம்…. ஒப்புதல் அளித்த அமெரிக்கா….!!

அமெரிக்கா கிட்டத்தட்ட 20 மாதங்கள் கழித்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை முழுவதும் செலுத்திக் கொண்ட சர்வதேச பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. ஆகையினால் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்கள்.

ஆனால் தற்போது அனைத்து நாடுகளிலும் மெல்ல மெல்ல கொரோனா குறையத் தொடங்கியதால் அதற்காக தங்கள் நாட்டிற்குள் போடப்பட்டுள்ள பல கட்டுப்பாடுகளை அனைத்து நாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி வருகிறது.

அதன்படி அமெரிக்காவும் கொரோனாவிற்காக போட்ட சில கட்டுப்பாடுகளை விளக்கியுள்ளது. அதாவது அமெரிக்கா அரசாங்கம் சுமார் 20 மாதங்கள் கழித்து கொரோனாவுக்கு எதிரான முழுமையான தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சர்வதேச பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

Categories

Tech |