மும்பையில் இருக்கும் முகேஷ் அம்பானியின் வீட்டின் தகவல்களை மர்ம நபர்கள் 2 பேர் கேட்டதாக கால் டாக்சி டிரைவர் ஒருவர் காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்திருந்தார். மேலும் அந்த கால்டாக்சி டிரைவர், ஆசாத் மைதானம் பக்கத்தில் உள்ள கில்லா நீதிமன்றத்தில் அருகில் மஞ்சள் நிற நம்பர் பிளேட் பொருத்திய மாருதி வேகன் ஆர் காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்த 2 பேர் முகேஷ் அம்பானியின் வீடு குறித்து விசாரித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் சீட்டின் கீழ் ஒரு பை இருந்தது எனவும் கால் டாக்சி டிரைவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலையடுத்து மும்பை நகர காவல் துறை உஷார்படுத்தப்பட்டு அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் முகேஷ் அம்பானியின் அண்டிலியா இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.