தமிழகத்தில் தொடர் கனமழையின் காரணமாக, இன்று தென்காசி, நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் , சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொடர் கன மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.