தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நிவாரண பணிகளை கண்காணிக்க சென்னைக்கு கூடுதலாக 3 அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நில சீர்திருத்த துறை கூடுதல் ஆணையராக சாந்தா, கலை மற்றும் கலாச்சார துறை ஆணையராக பிரகாஷ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக ஆனந்தகுமார், பள்ளி கல்வித்துறை துணை செயலாளராக சரண்யா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனராக பிரபாகர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையராக ராஜாராமன், சென்னை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் துணை ஆணையராக ஷேக் அப்துல் ரகுமான், தமிழக ஊரக புத்தாக்க திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியாக பத்மஜா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Categories