Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்..! வீடுகளில் மறைந்திருக்கும் ஆபத்து… ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

மனிதர்கள் சுமார் 7,000 பிளாஸ்டிக் துகள்களை நாள் ஒன்றுக்கு சுவாசிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மனிதர்கள் நாள் ஒன்றுக்கு பொருள்கள், பொம்மைகள், உடைகள் ஆகியவற்றின் மூலம் சுமார் 7,000 நுண் நெகிழி துகள்களை சுவாசிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இங்கிலாந்தில் நுண் நெகிழி குறித்த ஆராய்ச்சி ஒன்றினை போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளராக திகழும் சுற்றுச்சூழல் மாசு நிபுணர் ஃபே கூசிரோ தலைமை தாங்கி நடத்தியுள்ளார். அந்த ஆய்வில் சுமார் 7 ஆயிரம் நுண் நெகிழி துகள்களை மனிதர்கள் நாள் ஒன்றுக்கு சுவாசித்து வருவதாக தெரியவந்துள்ளது. அதற்கு காரணம் பொம்மைகள், தரைவிரிப்பு, படுக்கை என அனைத்தும் செயற்கை பொருள்களாக பயன்படுத்துவதே என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே கூசிரோ நுண் நெகிழி குறித்த ஆய்வினை கண்ட அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆய்வில் வெளிவந்த உண்மை 14 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதையும் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் மனித உடலில் வளர்சிதை மாற்றத்தில் மாற்றங்கள் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் நுண் நெகிழிகள் மனிதனின் இனப்பெருக்கத் திறனை பாதிப்பதோடு புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே நுண் நெகிழிகள் மனிதர்களின் வீடுகளில் மறைந்துள்ள ஆபத்து என்பதை ஃபே கூசிரோ சுட்டிக்காட்டியுள்ளார்.

Categories

Tech |