Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே இதை கட்டாயம் செய்யுங்க…. மாநகராட்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மழைக் காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு, காலரா,மஞ்சள் காமாலை மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்க வேண்டும். உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறையை பயன்படுத்திய பிறகும் சோப்பு பயன்படுத்தி முறையாக 20 நொடிகள் கைகளை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.வீட்டிற்கு வெளியில் செல்லும்போது காலணிகளை அணிந்து செல்லலாம். வீட்டிற்கு வெளியில் சென்று வந்த ஒவ்வொரு முறையும் கை கால்களை சோப்பு போட்டு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.

சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பாம்புகளில் தேங்கிய நீரை குடிநீராக பயன்படுத்துவதை தவிர்க்கவும். சாலையோரங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த மற்றும் தூசு படிந்த உணவு பண்டங்களை உண்பதை தவிர்க்கவும். சமைத்தவுடன் உணவினை சூடாக சாப்பிடவும். பழைய உணவினை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து பொது கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனை மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவரிடம் முறையான சிகிச்சைப் பெற வேண்டும். மக்கள் சுய சிகிச்சை செய்யக் கூடாது.வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் வீட்டில் உள்ள நீர் ஆதாரங்களை அடிக்கடி பருகவும். உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |