Categories
மாநில செய்திகள்

ALERT: மக்களே உஷார்…. 26 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு….!!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தொடர் மழையால் பாலாறு மற்றும் பொண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டுப் பகுதியிலிருந்து 9,500 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இருபத்தி ஆறு கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் ஆந்திராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலவ குண்டா நிரம்பி அதில் இருந்து 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்ட காரணத்தினாலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னை மற்றும் பால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பணைக்கு நீர் வருகிறது. இந்நிலையில் வாலாஜாபேட்டை அணைக்கட்டு தடுப்பணை அதன் முழு கொள்ளளவை எட்டியது அங்குள்ள ஏரிகளும் முழுமையாக நிரம்பியதால் 9,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் கரையோரம் வசிக்கும் 26 கிராமங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் ஆற்றில்குளிப்பது மற்றும் துணி துவைப்பது போன்றவற்றை செய்ய வேண்டாம். தாழ்வான பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |