தனியார் நிதி நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி சந்திப்பு மதுரை சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அமைந்துள்ளது. இதன் மாடியில் தனியார் வீட்டு வசதி மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ஊழியர்கள் பணிகளை முடித்துவிட்டு மாலையில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இரவு சுமார் 8 1\2 மணிக்கு நிதி நிறுவன அலுவலக பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. அதன்பின் தீ மளமளவென்று பற்றி எரிய தொடங்கியது. மேலும் கொட்டும் மழையிலும் கட்டிடத்திற்கு வெளியே பயங்கரமாக கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி தடுப்புகள் வெடித்து ரோட்டில் சிதறியது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் சந்திப்பு காவல்துறையினர் விரைந்து சென்றநற். அதன்பின் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர். இதனையொட்டி மதுரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ரோட்டில் சிதறிக் கிடந்த கண்ணாடி துண்டுகளை அப்புறப்படுத்தினர். இந்த தீ விபத்தில் அங்கிருந்த ஆவணங்கள், பொருட்கள் ஆகியவை எரிந்து சேதமடைந்தது. இது குறித்து நெல்லை சந்திப்பு காவல்துறையினர் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.