தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 12 மணி நேரத்தில் உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 11ஆம் தேதி அதிகாலை தமிழகத்தை வந்தடையும்.தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றிய தெற்கு அந்தமான் பகுதிகளில் தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு மணி நேரத்தில் தென் கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடதமிழகம் அருகே 11 ஆம் தேதி வரும்.அதனால் தமிழகத்திற்கு ஐந்து நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மணிக்கு 60 கிலோமீட்டர் வரையில் பலத்த சூறை காற்று வீசும்.கடந்த இரண்டு நாட்களை விட தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.