Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைகளில்…. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டதன் முக்கிய காரணம் போலி குடும்ப அட்டைகளை ஒழிப்பதுதான். இந்தத் திட்டம் 4 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது.இதன் மூலமாக போலி ரேஷன் அட்டைகள் ஓரளவு அளிக்கப்பட்டாலும் கடந்த 4 ஆண்டுகளாக இறந்தவர்களின் பெயர்கள் ரேஷன் அட்டைகளில் இருந்து நீக்கப்பட வில்லை. அதனால் இறந்தவர்களுக்கும் சேர்த்து ரேஷன் பொருட்கள் ஒதுக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில் உணவு வழங்கல் துறை ஆணையரகம் சார்பில் ரேஷன் அட்டைகளில் உள்ளவர்களின் பெயர்கள் மற்றும் ஆதாரங்களோடு சரிபார்க்கப்பட்டது. அதில் 10,63,583இறந்த நபர்களுக்கும் சேர்த்து ஒவ்வொரு மாதமும் ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உணவு வழங்கல் துறை,ஒவ்வொரு மாவட்டத்திலும் இறந்தவர்களின் பெயர்கள் ரேஷன் அட்டைகளில் இருந்து நீக்குவதற்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோருக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், இறப்புச் சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் கூட ஏற்கனவே காலமாகிவிட்ட குடும்பத் தலைவர், உறுப்பினர்களின் பெயர்கள் பொது விநியோக திட்ட இணையத்தில் உள்ள தரவுகளில் இன்னும் இடம்பெற்றுள்ளது. இது உடனடியாக தவிர்க்கப்பட வேண்டும். எனவே சோதனை தணிக்கை பெயர்,செல்போன் நெம்பர் மற்றும் ரேஷன் அட்டை எண் போன்ற விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக தமிழகம் முழுவதும் இறந்தவர்களின் பெயரை நீக்கம் செய்ய வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |