கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்கள் எந்தவொரு பயணக்கட்டுப்பாடுகளும் இல்லாமல் பிரிட்டனுக்குள் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக மக்கள் தடுப்பூசியை தீவிரமாக செலுத்தி வருகின்றனர். இதற்காக கோவாக்சின், கோவிஷீல்ட் போன்ற தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தப்படுகிறது. மேலும் மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்காக கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது.
இதனை அடுத்து தற்பொழுது உலக சுகாதார அமைப்பும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து பிரிட்டன் அரசு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதற்கு எந்தவொரு கட்டுப்பாடுகளும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்துதல் போன்ற எந்த வித பயணக்கட்டுப்பாடுகளும் அவசியமில்லை என்றும் கூறியுள்ளது.