Categories
உலக செய்திகள்

உலக தலைவர்கள் தரவரிசை பட்டியலில்…. மீண்டும் இந்திய பிரதமர் முதல் இடம்…!!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக அளவில் தலைமைத்துவம் அங்கீகாரம் மதிப்பீட்டிலான ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனமானது உலக நாடுகளின் அரசியல் நகர்வுகளை வாராந்திர அடிப்படையில் எடுக்கப்படும் ஆய்வுகள் மூலம் மதிப்பிட்டு வருகிறது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்டோர் எடுக்கப்படும் ஆய்வுகள் மூலம் இந்த மதிப்பீடு வெளியிடப்படுகிறது. இந்த மதிப்பீட்டில் இந்தியா,அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென்கொரியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 13 நாடுகளும் தலைவர்களுக்கான அங்கீகாரம் மதிப்பீட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி நிலவரத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டது அதில் 70% ஆதரவு பெற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடத்தில் உள்ளார். மேலும் இந்தப் பட்டியலில் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடார் 66 %, இத்தாலி பிரதமர் மரியோ டிராகி 58%, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் 54% , ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் 47%, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 44%, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 43 %மற்றும்  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 40% இடம்பிடித்துள்ளனர்.மற்ற 12 நாடுகளை பின்தள்ளி இந்திய பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.இதற்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |