Categories
மாநில செய்திகள்

நிரம்பி வழியும் மதுராந்தகம் ஏரி…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நேற்று அதன் முழு கொள்ளளவை எட்டியது.அதனால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் கிளி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு வரும் நீர் அதிகரிக்கும் நிலையில் கிளி ஆற்றின் வழியாக வெளியேறும் நீரின் அளவும் அதிகரிக்கும். எனவே கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுராந்தகம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் கிளி ஆற்றை ஒட்டியுள்ள கருங்குழி, இருசம நல்லூர், பூதூர், ஈசூர், கத்திரி சேரி, விழுதமங்கலம், வளர்பிறை, முள்ளி, முன்னூத்தி குப்பம், முருங்கன் சேரி,குன்னத்தூர் மற்றும் நீலமங்கலம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் யாரும் ஆற்றுக்குள் செல்லக் கூடாது. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் வெள்ள நீர் செல்லும் கிளி ஆற்றில் இறங்குவது, ஆற்றைக் கடப்பது, குடிப்பது, துணி துவைப்பது ஆகிய செயல்களில் ஈடுபடக்கூடாது.கால்நடைகள் மற்றும் வீட்டில் உள்ள சிறுவர்கள் ஆற்றின் பக்கத்தில் செல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |