கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விருமன். இந்த படத்தை குட்டிப் புலி, மருது, தேவராட்டம், கொம்பன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த முத்தையா இயக்கி வருகிறார். இந்த படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மேலும் கடந்த சில மாதங்களாக தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் விருமன் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படப்பிடிப்பை முடித்து, 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.