Categories
உலக செய்திகள்

வன்முறையால் 460 குழந்தைகள் பலி… யுனிசெப் வெளியிட்ட தகவல்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் வன்முறையால் ஏராளமான குழந்தைகள் பலியாகி உள்ளனர். இது குறித்து ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டுமே 460 குழந்தைகள் உயிரிழந்து உள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த வியாழக்கிழமை காலையில் குந்தூஸ் பகுதியில் போர் காலத்தில் வைக்கப்பட்ட குண்டு திடீரென்று வெடித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளது. மேலும் மூன்று குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த ஆண்டில் இவ்வளவு குழந்தைகள் குண்டுவெடிப்பால் பலியானது கவலை அளிப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. மட்டுமில்லாமல் வறுமை, உணவு பஞ்சம் மற்றும் சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளாலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |