Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. தக்காளி விலை தாறுமாறு உயர்வு…. மக்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.அதுமட்டுமல்லாமல் விளை நிலங்களில் மழைநீர் புகுந்து உள்ளதால் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் தொடர் மழை காரணமாக சில இடங்களில் தக்காளி விலை 100 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. பருவமழைக்கு முன்னதாக 45 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி நேற்று 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.முன்பு ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |