பெங்களூரில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கர்நாடக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. பொதுப் போக்குவரத்துகளை இயங்க அனுமதி அளிக்கப்பட்டாலும் பயணிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெங்களூரில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கர்நாடக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி முதல் இரண்டு கிலோமீட்டருக்கு தற்போது 25 ரூபாயாக இருந்த அடிப்படைக் கட்டணம் 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.15 வசூலிக்கப்படும். கடந்த 2013ம் ஆண்டு ஆட்டோ கட்டணத்தை அரசு திருத்தியமைத்ததாகவும், புதிய கட்டணம் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.