அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சிசன்-2 நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இவர் இதற்குமுன் சீரியல்களிலும், ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்தார். மேலும் இவர் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். தற்போது அஸ்வின் என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
Neenga aavaludan, #Aasai-udan edhirpaartha, #EnnaSollaPogirai Teaser! ❤️
This Wednesday, Nov 🔟 🎉@i_amak @ImHharan #Ravindran @iamviveksiva @MervinJSolomon @Avantika_mish @TejuAshwini9 @VijaytvpugazhO @Richardmnathan @mathisachin @Gdurairaj10 @RubiniSakthi pic.twitter.com/DTIggwtEhO
— Trident Arts (@tridentartsoffl) November 8, 2021
மேலும் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் டீஸர் நவம்பர் 10-ஆம் தேதி (நாளை) வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.