கார்த்தியின் ‘கைதி’ படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸாக உள்ளது.
தமிழ் சினிமாவில் கார்த்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”கைதி”. இந்த படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற இந்த படம் பல்வேறு விருதுகளையும் வென்றது.
இந்நிலையில், இந்த படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸாக உள்ளது. ஜப்பானில் ”கைதி டில்லி” என பெயரிடப்பட்ட இந்த படம் நவம்பர் 19ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.