ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை 18 நாட்களாக ஒரு வீட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் நான்கு வயதுடைய Cleo Smith என்ற குழந்தை பெற்றோருடன் வெளியில் சென்றபோது காணாமல் போனது. காவல்துறையினர் சுமார் 18 நாட்களாக குழந்தையை தீவிரமாக தேடி வந்த நிலையில், Carnarvon நகரத்தின் ஒரு குடியிருப்பில் குழந்தை கடத்தி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.
எனவே, அந்த குடியிருப்பிற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அடைக்கப்பட்டிருந்த வீட்டிற்குள் இருந்து குழந்தையை மீட்டுவிட்டார்கள். இச்சம்பவம் தொடர்பில் Terence Darrell Kelly 36 வயதுடைய நபர் கைதாகியுள்ளார். தற்போது அவரை காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
எனினும் நள்ளிரவு நேரத்தில் சுமார் 1.30 மணிக்கு காவல்துறையினர் பூட்டிய வீட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்றபோது, குழந்தை பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அதாவது, பூட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு வீட்டில் 18 நாட்களாக இருந்த குழந்தை நல்ல ஆடை அணிந்து நன்றாக விளையாடிக் கொண்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மேலும், காவல்துறையினர் குழந்தையை மீட்டபோது, குழந்தை பயப்படவோ, சோர்வடையவோ இல்லை. அதற்கு என்ன காரணம்? என்று தற்போது தெரியவந்திருக்கிறது. அதாவது காவல்துறையினர் குழந்தையிடம் விசாரணை மேற்கொண்டனர். குழந்தை கூறியதாவது, “என்னை வீட்டில் அடைத்து வைத்திருந்தனர்.
அப்போது, பெண் ஒருவர் எனக்கு ஆடை மாற்றி, தலைவாரிவிட்டார்” என்று கூறியது. எனவே, இந்த வழக்கில் ஒரு பெண்ணிற்கு தொடர்பு இருக்கிறது என்று கருதிய காவல்துறையினர், அந்த பெண்ணை கண்டறியும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.