ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது.
பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிடிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.
Here’s #RRRSecondSinglePromo – https://t.co/Aw1gxq3tz8
நாட்டு நாட்டு நாட்டுக் கூத்தக் காட Tomorrow 4PM💥#NaattuKoothu🕺@ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @mmkeeravaani @oliviamorris891 @RRRMovie @madhankarky @DVVMovies @LycaProductions @LahariMusic @TSeries #RRRMovie
— RRR Movie (@RRRMovie) November 9, 2021
மேலும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி இந்த படம் பல்வேறு மொழிகளில் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக் கூத்து பாடலின் அசத்தலான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது.