Categories
மாநில செய்திகள்

மக்களே அலெர்ட் ஆகுங்க…. இன்று, நாளை, நாளை மறுநாள்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 11-ஆம் தேதி வடதமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் மூன்று நாளைக்கு மிகக்கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களிலும், நவம்பர் 11ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |