Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகத்தில் சாப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

போரூரில் உள்ள அம்மா உணவகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார்..

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் தொடங்கிய கனமழை விடாமல் வெளுத்து வாங்கி வருகிறது.. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகள், தெருக்களிலும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதுமட்டுமில்லாமல் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்..

இதற்கிடையே முதல்வர் முக ஸ்டாலின் நேற்று முன்தினம் காலை முதல் மழை நீர் தேங்கிய பகுதிகளில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றார்.. அதேபோல நேற்றும் அவர் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து நிவாரணம் வழங்கினார்.. அதன் தொடர்ச்சியாக இன்றும் முதல்வர் ஸ்டாலின் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டார்..

அதன் ஒரு பகுதியாக சென்னை போரூர், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு உணவு உட்கொண்டு தரத்தை ஆய்வு செய்து, பின் மக்களுக்கு உணவு வழங்கினார்.. மேலும் அவர், சென்னையில் மழை பாதிப்பு குறையும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது..

 

 

Categories

Tech |